காலைத் தியானம் – ஏப்ரல் 17, 2020

1 இராஜா 18: 7- 15

கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒளித்து வைத்து

இன்று நாம் பேசுகிறபடி சொல்லவேண்டுமானால், ஒபதியா ஒரு முழு நேர ஊழியக்காரன் அல்ல. அவன் ஆகாப் ராஜாவின் அரண்மனையில், அரண்மனை விசாரிப்புக் காரனாயிருந்தான். இருந்தாலும் எப்போதும் கர்த்தரோடு தொடர்பு வைத்திருந்த ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தான். நூறு தீர்க்கதரிசிகளை இரண்டு கெபிகளிலே ஒளித்து வைத்தது மாத்திரமல்லாமல், அவர்களுக்கு வேண்டிய உணவையும் தண்ணீரையும் கொடுத்து பராமரித்து வந்தான். எத்தனை காலம் இப்படி செய்துவந்தான் என்பது சொல்லப்படாவில்லை. ஆனால் அநேக நாட்கள் இப்படி செய்து வந்தான் என்பது தெரிகிறது. ஒரு அரண்மனை விசாரிப்புக்காரனை விட சிறப்பாக இந்த வேலையை யார் செய்ய முடியும்? நூறு பேருக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் அவன் பொறுப்பில் இருந்தன அல்லவா? ஒபதியாவை அரண்மனை விசாரிப்புக்காரனாக வைத்த கர்த்தர் உன்னையும் ஒரு காரணத்திற்காக நீ இருக்கும் இடத்தில் வைத்திருக்கிறார். நீ அந்த காரணத்தை அறிந்து செயல் படுகிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, நான் இருக்கும் இடத்திலும், வேலையிலும் ஏன் என்னை வைத்திருக்கிறீர் என்பதை அறிந்து செயல்பட எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.