2 இராஜா 5: 19 – 27
என் மனம் உன்னுடன் கூடச் செல்லவில்லையா?
கேயாசி கர்த்தருக்கு அவ்வளவு அருகிலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்தான் என்பதைக் கவனியுங்கள். யூதாஸ்காரியோத்தின் நிலையும் அதுதானே! இன்று அநேக திருச்சபைகளின் நிலையும், கிறிஸ்துவின் பெயரைத் தாங்கும் தலைவர்களின் நிலையும், ஊழியர்களின் நிலையும் அது தானே! பணத்துக்காகவும், பொருட்களுக்காகவும், வசதிகளுக்காகவும், பதவிக்காகவும், சிற்றின்பங்களுக்காகவும் இயேசுவை விற்றுப் போடுகிறவர்கள் நம்மில் எத்தனை பேர்? கேயாசியே, நீ தப்புப் பண்ண நினைக்கும்போது என் முகம் உன் மனதின் முன் வரவில்லையா என்று எலிசா கேட்டார். அதைத்தான் இயேசுவும் உன்னிடம் கேட்கிறார். கேயாசிக்கும் யூதாசுக்கும் வந்த முடிவு நம்மில் ஒருவருக்கும் வந்து விடக் கூடாது. இயேசு உன்னோடு பேசினால் இன்றே அவரிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் ஒப்புரவாகிவிடு. கர்த்தர் வெறுக்கும் வழிகளை விட்டு விலகு.
ஜெபம்
ஆண்டவரே, நானும் என் சுய நலனுக்காக உம்முடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதுண்டு. என்னை மன்னித்து சுத்திகரியும். ஆமென்.