காலைத் தியானம் – ஜூலை 10, 2020

2 இராஜா 19: 8 – 19  

நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே              

நானே சத்தியம் என்று சொன்ன கர்த்தர் பொய் சொல்வாராம்! அவர் ஏமாற்றுவாரம்! அது தானே ஆதிமுதல் சாத்தான் கடைப்பிடிக்கும் தந்திரம்.  அப்படித்தானே  சாத்தான் ஏவாளை ஏமாற்றினான்! கர்த்தர் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம் என்று சொன்னாரோ? அதைச் சாப்பிட்டால் சாவீர்கள் என்று சொன்னாரோ? இல்லவே இல்லை. அது பொய். அதைச் சாப்பிட்டால் நீங்களும் கடவுள் போலாகிவிடலாம். நீங்கள் சாகவே மாட்டீர்கள். இப்படிப்பட்ட பொய்யை ஏவாள் நம்பியிருக்கலாம்; நான் நம்ப மாட்டேன் என்று நினைக்கிறாயோ? கர்த்தருக்கு உன் ஜெபம் முக்கியமல்ல என்று உன்னை நினைக்க வைப்பது சாத்தான். கர்த்தர் அன்று அற்புதங்கள் செய்தது போல இப்போது செய்ய மாட்டார் என்று உன்னை நினைக்க வைப்பதும் சாத்தான். கர்த்தருடைய குணாதிசயங்களில் எதையாவது குறைத்து எடைபோடும்படி உன் விசுவாசம் அசைக்கப்பட்டால் சாத்தான் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தம். நீ ஏமாந்து விட்டாய் என்று அர்த்தம். சாத்தானுக்கு ஒரு இம்மி கூட இடம் கொடுக்காதே.

ஜெபம்

ஆண்டவரே, சாத்தான் சாமர்த்தியமான சூழ்ச்சிக்காரன் என்பதை அறிவேன். அவன் என்னை நெருங்காதபடி என்னைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.