காலைத் தியானம் – ஆகஸ்ட் 07, 2020

எஸ்றா 1: 4- 11

யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் . . .  எழும்பினார்கள் 

யூதா அல்லது தெற்கு சாம்ராஜியத்தில், முதலாவதாக யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தார் மாத்திரம்தான் இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் மற்ற கோத்திரத்தாரிலும் சிலர் யூதாவில் வந்து குடியேறியிருந்தார்கள். ஆகையால் பாபிலோனுக்குச் சிறை கைதிகளாக சென்ற போதும், இப்போது திரும்பி வரும்போதும் யூதா பென்யமீன் கோத்திரத்தாரைத் தவிர மற்ற பத்து கோத்திரத்தாரும் இருந்தார்கள். ஆலயதைக் கட்டும்படி எழும்பினவர்கள் ஒரு சாரார். அதற்காக பொருட்களையும் காணிக்கைகளையும் முழுமனதுடன் கொடுத்தவர்கள் இன்னொரு சாரார்.  யூதர்களைச் சுற்றியிருந்த மற்றவர்களும் பொருட்களையும் காணிக்கைகளையும் கொடுத்தார்கள் என்பதைப் பார்க்கிறோம் (வசனம் 6). கர்த்தர் தம்முடைய திட்டங்களை நிறைவேற்ற கிறிஸ்தவர்களை மாத்திரமல்ல, யாரை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இன்றும் கர்த்தருடைய ஆலயமாகிய திருச்சபையைக் கட்டும் அழைப்பு எல்லாருக்கும் வருகிறது. உன் பங்கு என்ன என்பதை அறிந்து அதைச் செய்.  

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ஆலயமாகிய திருச்சபையைக் கட்டும் பணியில் என்னையும் உபயோகியும். ஆமென்.