காலைத் தியானம் – செப்டம்பர் 06, 2020

நெகே 4: 7 – 16    

ஆனாலும் நாங்கள் . . . ஜெபம்பண்ணி . . . ஜாமங்காக்கிரவர்களை வைத்தோம்

கிண்டலில் ஆரம்பித்த எதிரிகளின் குரல், கோபத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளுக்கு வந்து, இப்போது யுத்த மிரட்டலுக்கு வந்துவிட்டது. நெகேமியாவும் அவரோடு சேர்ந்த மக்களும் அதை அசட்டை செய்யவில்லை. அதே சமயம் மிரட்டலுக்குப் பயந்து அலங்கத்தைக் கட்டும் வேலையை நிறுத்தவுமில்லை. அவர்கள் கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணுகிறார்கள். அது மாத்திரமல்ல, அதற்குப் பின் செய்ய வேண்டியவைகளை யோசித்து, திட்டம் போட்டு, செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். நம்மில் அநேகர் எதிரிகளைக் கண்டு பயந்து செயலற்று நின்றுவிடுகிறோம். அல்லது எதிரிகள் அகன்று போகும்படி கர்த்தர் ஒரு அற்புதத்தைச் செய்யும் வரை ஜெபித்துக் கொண்டேயிருப்போம் என்று இருந்து விடுகிறோம். நெகேமியா ஜெபித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதற்குப்பின் என்ன செய்யவேண்டும் என்பதைத் திட்டமிட்டார். அந்த திட்டத்தைச் செயல்படுத்தினார்.

ஜெபம்

ஆண்டவரே, நீரே என்னைப் பாதுகாக்கிறவர் என்பதை அறிவேன். ஆபத்து என்னைச் சூழ்ந்துகொள்ளும்போது நான் செயல்படுவதற்குத் தேவையான ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.