காலைத் தியானம் – செப்டம்பர் 24, 2020

நெகே 10: 32- 39                  

முதற்பலன் . . . பத்தில் ஒரு பங்கு     

இஸ்ரவேல் மக்கள் உடன்படிக்கையில் குறிப்பிட்ட சில அம்சங்களை இன்று நாம் கண்டுகொள்வதே இல்லை. முதற்பலனையும் முதற்கனியையும் கர்த்தருக்கென்று கொடுக்கும் பழக்கம் கடந்த நாற்பது வருடங்களில் மிகவும் குறைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு அது என்னவென்றே தெரியாது. முதற்பலனையும் முதற்கனியையும் கர்த்தருக்கென்று கொடுக்கும் பழக்கத்தை உங்கள் குடும்பங்களில் கடைபிடியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தசம பாகம் கொடுக்கும் பழக்கமும் மங்கிக் கொண்டே போகிறது. உங்கள் திருச்சபையையும், ஆண்டவருடைய ஊழியங்களையும், ஊழியக்காரரையும் தாங்குவது உங்களுடைய பொறுப்பு. கள்ளத் தீர்க்கதரிசிகளும், கள்ளப் போதகர்களும், வேதத்தைப் புரட்டுகிறவர்களும் பெருகிவிட்ட இந்நாட்களில் உங்கள் காணிக்கைகளைக் கொடுப்பதிலும் ஞானமாய் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்

ஆண்டவரே, உமக்குத் தசம பாகம் கொடுப்பதிலும், முதற்பலனைக் கொடுப்பதிலும் அலட்சியம் காட்டாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.