நெகே 12: 24 – 42
தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும்
தாவீது ராஜா, இஸ்ரவேல் மக்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி எருசலேம் ஆலயத்தைக் கட்ட ஆசைப்பட்டார். கர்த்தரோ அதை தாவீதின் மகனான சாலொமோன் ராஜாதான் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆனால் கர்த்தர் தாவீதுக்கு ஆலயம் கட்டுவதைவிட ஒரு மேலான வேலையை வைத்திருந்தார். தாவீதின் மூலமாகப் பாடல்களைக் கொண்டு கர்த்தரைத் தொழுதுகொள்ளும் முறை ஏற்படுத்தப்பட்டது. தாவீது கர்த்தரைத் துதிக்கும்படி அநேக சங்கீதங்களையும் எழுதினார். அவற்றை இன்றும் நாம் உலகம் முழுவதும் உபயோகிக்கிறோம் அல்லவா? சாலொமோன் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி கட்டிய ஆலயம் அழிக்கப்பட்டது. தாவீது கர்த்தரைத் துதிக்கவும் தொழுதுகொள்ளவும் ஏற்படுத்திய முறை இன்றும் அழியவில்லை. கர்த்தருடைய எண்ணம் நம்முடைய எண்ணங்களைவிட மிகவும் உயர்ந்தது.
ஜெபம்
ஆண்டவரே என் வாழ்க்கையில் நிகழும் பல நிகழ்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உம்மைச் சார்ந்திருக்கும் எனக்கு, உம்முடைய திட்டத்தின்படியே எல்லாம் நடக்கிறது என்பதை உணர்ந்து உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.