காலைத் தியானம் – அக்டோபர் 31, 2020

யோபு 3: 1 – 26                                                     

யோபு தான் பிறந்த நாளைச் சபித்து        

யோபு முதலாம் சோதனையை எதிர்கொண்ட விதத்திலிருந்து இரண்டாவது சோதனையை எதிர்கொண்ட விதம் வித்தியாசமாக இருந்தது. முதலாவது சோதனையில் துன்பங்களின் மத்தியில் கர்த்தரைத் துதித்தான். இரண்டாவது சோதனையோ, மனவேதனையோடு சேர்த்து சரீர வேதனையையும் கொடுத்தது. அந்நிலையிலும் அவன் கர்த்தரைச் சபிக்கவில்லையென்றாலும், தான் பிறந்த நாளைச் சபித்தான். மனவேதனைகளையும் சரீர வேதனைகளையும் அனுபவிக்கும் காலங்கள், நாம் நமது விசுவாசத்திலிருந்து விழக்கூடிய காலங்களாகவும் இருக்கலாம் அல்லது இப்படிப்பட்ட நாட்களில் தான் உம்முடைய கிருபையும் பெலனும் எனக்கு இன்னும் அதிகமாகத் தேவை என்று சொல்லி அவரை இறுகப் பற்றிக் கொள்ளும் காலங்களாகவும் அமையலாம். நீ எதைத் தெரிந்துகொள்கிறாய் என்பது உன்னைப் பொறுத்ததுதான்.          

ஜெபம்

ஆண்டவரே, துன்பங்களைக் கடந்து செல்லும் நாட்களில் உமது கிருபையை அதிகமாக எனக்குத் தாரும். ஆமென்.