காலைத் தியானம் – அக்டோபர் 11, 2020

எஸ்தர் 3: 7 – 15                           

அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம்               

ஆமானை வணங்கி நமஸ்கரிக்க வேண்டுமென்பது ராஜாவின் கட்டளை. அதை மொர்தெகாய் மீறினான். காரணத்தை அறிந்துகொண்ட  ஆமான், யூதர்கள் யாருமே தன்னை வணங்கமாட்டார்கள் என்று யூகித்துக் கொண்டான். அது மாத்திரமல்ல, மொர்தெகாயை மட்டும் பழிவாங்கினால் போதாது; மொத்த யூத சமுதாயத்தையே இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பது ஆமானின் திட்டம். அதற்குக் காரணம், ஆமான் ஒரு ஆகாகியன்.  அதாவது 1 சாமுவேல் 15: 20ல் சொல்லப்பட்டுள்ள அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகின் வம்சத்தில் வந்தவன். அமலேக்கியர் யூதர்களின் விரோதிகள்.  அமலேக்கியரை மொத்தமாக அழிக்க வேண்டுமென்பது பல வருடங்களுக்கு முன் சவுல் ராஜாவுக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய கட்டளை. சவுல் அதை செய்யவில்லை. இப்போது ஆமான் யூதர்களை அழிக்க வழி செய்கிறான். தன் ராணியாகிய எஸ்தரையே கொல்வதற்குரிய சட்டம் என்பதை அறியாமல் அகாஸ்வேரு அந்த சட்டத்துக்கு தன் சம்மதத்தைக் கொடுக்கிறான்.       

ஜெபம்

ஆண்டவரே, நான் உமக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அதன் விளைவுகளை எனக்குப் பின் வரும் தலைமுறையினர் சந்திக்க நேரிடும் என்பதை உணருகிறேன். உமக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியும் மனதை எனக்குத் தாரும்.   ஆமென்.