காலைத் தியானம் – அக்டோபர் 15, 2020

எஸ்தர் 5: 9 – 14                              

ஆனாலும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை            

ஆமான் ராஜவுக்கடுத்த நிலையில் இருக்கிறான்.  அகாஸ்வேரு ராஜா யூதர்களைத் தன் கையில் ஒப்படைத்துவிட்டார். எஸ்தர் ராணி ஒழுங்கு படுத்தியிருந்த விருந்தில் தன்னையும் ராஜாவையும் மாத்திரம் அழைத்திருந்தாள். மேலும் அடுத்த நாள் நடக்கப் போகும் விருந்துக்கும் அவன் மாத்திரம் ராஜாவோடு அழைக்கப்பட்டிருந்தான். மிகுந்த மகிழ்ச்சி. ஆமான் நடனமாடிக் கொண்டே வீட்டுக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அரண்மனை வாசலிலிருந்த மொர்தெகாய் ஆமானை வணங்கவில்லை. அந்த சிறிய நிகழ்ச்சி ஆமானை எப்படி பாதித்துவிட்டது என்பதைக் கவனியுங்கள். இதிலும் நமக்கு ஒரு முக்கிய பாடம் இருக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சியோ அல்லது மனிதனோ உனக்கு மூர்க்க வெறியை உண்டாக்கினால், அதினால் பாதிக்கப்படுவது நீ மாத்திரமே.  உன்னுடைய அடங்காத கோபம் உன்னையே அழித்துவிடாதபடி உன்னைப் பாதுகாத்துக் கொள்.      

ஜெபம்

ஆண்டவரே, மூர்க்க குணம் என்னை ஆட்கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். சாந்த இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.