காலைத் தியானம் – அக்டோபர் 16, 2020

எஸ்தர் 6: 1 – 14                                 

ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும்              

ஆமானாலேயே மொர்தெகாய்க்கு என்ன விதமான கனம் கிடைக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. ஆமான் தன்னைத் தவிர வேறே யாரையும் ராஜா கனம்பண்ண விரும்பமாட்டார் என்று நினைத்தான். ஒரு நாளும் நாம் நம்மையே உயர்த்த முயற்சிக்கக் கூடாது. நாம் மாத்திரமே எல்லா புகழ்ச்சிக்கும் பாத்திரர் என்ற எண்ணம் நமக்கு வந்துவிடக் கூடாது. மனத்தாழ்மை இருக்குமிடத்தில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வராது. 2 சாமுவேல் 12ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இதிலிருந்து மாறுபட்டதாயிருந்தாலும், இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன.  அங்கு நாத்தான் தீர்க்கதரிசி, தாவீது ராஜாவின் வாயாலேயே தனக்குத் தகுந்த தண்டனை என்ன என்பதைச் சொல்ல வைக்கிறான். ஒருபோதும் நான் தவறு செய்வதேயில்லை, மற்றவர்கள் தான் தவறு செய்கிறார்கள் என்ற எண்ணமும் நமக்கு வந்துவிடக் கூடாது.                 

ஜெபம்

ஆண்டவரே, எனக்கு மனத்தாழ்மையைக் கற்றுதாரும். மற்றவர்களை நியாயந்தீர்க்கும் குணத்தை என்னிடமிருந்து எடுத்துப் போடும். ஆமென்.