காலைத் தியானம் – அக்டோபர் 19, 2020

எஸ்தர் 8: 1 – 6                                  

என் ஜனத்தின் மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படி பார்க்கக்கூடும்?           

எஸ்தர் காப்பாற்றப்பட்டுவிட்டாள். மொர்தெகாயும் காப்பாற்றப்பட்டுவிட்டான். ஆனால் யூதர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட தீர்மானம் இன்னும் மாறவில்லை. ஆகையால் குறிப்பிட்ட நாளில் யூதர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற நிலை இன்னும் மாறவில்லை. எஸ்தர் ராணிக்கு இன்னும் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை. எப்படி தூங்க முடியும்? அவளுக்கு தன்னுடைய ஜனத்தின்மீது அவ்வளவு அக்கறை இருந்தது. இன்றும் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இந்தியர்கள் அநேகர் இருக்கிறார்கள் அல்லவா? உனக்கு எப்படி தூங்க முடிகிறது? நான் மாத்திரம் நன்றாக இருந்தால் போதும்; நான் மாத்திரம் பரலோகம் சென்றால் போதும் என்று நினைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்கிறாயோ? நீ உன் ஜனத்துக்காக அக்கறை எடுக்காவிட்டால் யார் அதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறாய்?             

ஜெபம்

ஆண்டவரே, நீர் மாத்திரம் கொடுக்கக் கூடிய பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் குறித்து, ஒவ்வொரு மாதமும் ஒருவருக்காவது எடுத்துச் சொல்லும் பாக்கியத்தை எனக்குத் தாரும்.  ஆமென்.