காலைத் தியானம் – நவம்பர் 30, 2020

யோபு 25: 1 – 6                                              

ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?   

இது யோபு புத்தகத்திலுள்ள ஒரு சிறிய அதிகாரம். ஏன் சொன்னதையே யோபுவும் அவன் நண்பர்களும் திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள் என்று நாம் சோர்ந்துபோகும் அளவுக்கு சொன்ன வாதங்களே வெவ்வேறு வார்த்தைகளில் வந்து கொண்டிருக்கின்றன. பில்தாத் மனிதனாய்ப் பிறந்த ஒருவனும் பரிசுத்தன் அல்ல என்று சொல்லுகிறான். அது உண்மைதான். பாவம் செய்யாதவன் ஒருவனும் இல்லை.  நாம் நம்முடைய பாவங்களுக்காக வருத்தப்பட்டு, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டால் மாத்திரமே நீதிமான்களாகிறோம். நீதிமான்களாக்கப்பட்ட நாம் இன்மேல் பாவம் செய்ய மாட்டோம் என்று முடிவு எடுக்கவேண்டும். அந்த முடிவு நம்மிடம்தான் இருக்கிறது. அப்படி முடிவு எடுத்தபின் தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ பரிசுத்த ஆவியானவரின் உதவி தேவை. ஒருவேளை பரிசுத்த வாழ்க்கை வாழ நீ போராடிக் கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடு.  நீ சுத்தமாயிருப்பதற்கு அதுதான் ஒரே வழி.

ஜெபம்

ஆண்டவரே, பாவியாகிய என்னைச் சுத்தமாக்கி சதாகாலமும் உம்மோடு வாழ என்னைத் தகுதி படுத்தியதற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.