காலைத் தியானம் – நவம்பர் 19, 2020

யோபு 15: 1 – 35                                              

பர்வதங்களுக்கு முன்னே உருவாக்கப்பட்டீரோ?

எலிப்பாஸ் மறுபடியும் பேச ஆரம்பித்துவிட்டான். இரண்டாவது சுற்று தர்க்கம் ஆரம்பித்துவிட்டது. முதல் சுற்றைவிட இரண்டாவது சுற்று அதிகக் காட்டமாக ஆரம்பித்துவிட்டது. ஆனால் எலிப்பாசிடம் சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அதே வாதம் தான். கர்த்தர் நீதிமானை ஆசீர்வதிக்கிறார்; துன்மார்க்கனைத் தண்டிக்கிறார். யோபு கர்த்தரால் தண்டிக்கப்பட்டுள்ளான். ஆகையால் அவன் கர்த்தருக்குப் பிரியமில்லாத அக்கிரமம் எதையோ செய்துவிட்டான்.  இது இரு தரப்பினரையும் எங்கும் கொண்டு செல்லவில்லை. எப்படியாவது இந்த தர்க்கத்தை ஜெயிக்கவேண்டும் என்பதே எலிப்பாசின் குறிக்கோளாக இருந்ததே தவிர, யோபுவுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றிலுமாக இல்லை. தர்க்கத்தை ஜெயித்து என்ன பயன்?

ஜெபம்

ஆண்டவரே, வீணான தர்க்கங்களிலிருந்து என்னை விலக்கிக் காரும். ஆமென்.