காலைத் தியானம் – நவம்பர் 24, 2020

யோபு 19: 1 – 29                                                 

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் . . .  என்று நான் அறிந்திருக்கிறேன்  

I know that my Redeemer lives. ஒரு பக்கத்தில் இழப்பு, மற்றும் சரீர வேதனை யோபுவை வாட்டியது. மற்றொரு பக்கம் குற்றம்சாட்டுகிற நண்பர்களும் (ஒருவேளை சமுதாயமும்) அவனை வாட்டினார்கள். அது மாத்திரமல்ல தேவன் தீமைகளை அனுமதிப்பதால், நன்மை தீமை இரண்டையுமே தேவன்தான் அனுப்புகிறார் என்ற கருத்து யூதர்கள் மத்தியில் நிலவியது. அந்த கருத்தின்படி, தேவன் எனக்கு இவ்வளவு துன்பங்களைக் கொடுத்துவிட்டாரே என்ற வேதனையும் யோபுவை வாட்டியது. தேவனுக்கும் சாத்தானுக்குமிடையே நடந்த உரையாடல் யோபுவுக்குத் தெரியாதே! அப்படிப்பட்ட நேரத்திலும் யோபுவின் விசுவாசம் உறுதியாயிருந்தது. என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் என்னை மீட்பார். என் கண்களே அவரைக் காணும். அதுதான் விசுவாசம்.    

ஜெபம்

ஆண்டவரே, துன்பத்தின் மத்தியிலும் உம்மைப் பற்றிக் கொள்ளும் விசுவாசத்தை எனக்குத் தாரும். ஆமென்.