காலைத் தியானம் – டிசம்பர் 08, 2020

யோபு 32: 1 – 22

நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்  

இன்று எலிகூ என்னும் இளைஞன் பேசியதைக் குறித்து பார்க்கிறோம்.  இதுவரை பேசிய யோபு அமைதியாகிவிட்டான். யோபுவின் மூன்று நண்பர்களும் அமைதியாயிருந்தார்கள். யோபு எவ்வளவோ முறையிட்ட போதிலும் கர்த்தரும் அமைதியாயிருந்தார். இதுவரை அமைதியாயிருந்து எல்லாருடைய வாதங்களையும் கேட்டுக் கொண்டிருந்த எலிகூ இப்போது மிகவும் கோபம்கொண்டு பேச ஆரம்பிக்கிறான். தான் அமைதியாயிருந்ததற்கு இரண்டு காரணங்களை அவன் எடுத்துக் கூறுகிறான். எலிகூ வயதில் இளையவன். அவன், வயதில் பெரியவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்று அமைதியாயிருந்தானாம். இரண்டாவது எல்லாருடைய வாதங்களையும் முதலில் கேட்கவேண்டும் என்று அவன் நினைத்ததாலும் இதுவரை அவன் அமைதியாயிருந்தானாம். பெரியோரெல்லாம் ஞானிகளல்ல என்பதைப் புரிந்து கொண்ட அவன் இப்போது பேச ஆரம்பிக்கிறான். நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்கிற அணுகுமுறை எல்லா நேரங்களிலும் பலனளிப்பதில்லை.                                 

ஜெபம்

ஆண்டவரே, நான் எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாயிருக்க வேண்டும் என்பதை நீரே எனக்குப் போதியும். ஆமென்.