காலைத் தியானம் – ஜனவரி 14, 2021

பிர 5: 10 – 15                    

பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை             

பணம் எவ்வளவு அதிகமாகப் பெற்றாலும் இன்னும் வேண்டுமென்ற ஆசையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. செல்வமும் திருப்தியும் எதிர்திசைகளில் செல்கின்றன. அதாவது செல்வம் பெருகப் பெருக, திருப்தி குறைந்து கொண்டே போகிறது. பொருள் எவ்வளவு பெருகினாலும் நீ திருப்தி செய்ய வேண்டியது அரை அடி அளவுள்ள வயிறு தானே! உன்னிடம் அதிக செல்வம் இருந்தால், உன் செல்வத்துக்காக உன் பின் வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். செல்வம் அதிகரிக்கும்போது மனிதன் நிம்மதியான தூக்கத்தைக் கூட இழந்துவிடுகிறான். செல்வம் அதிகரிக்கும்போது அதைச் சேர்த்துவைக்கிறவனுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் கூடிக்கொண்டே போகிறது. செல்வத்தைப் பின்தொடர்ந்து உன் வாழ்நாட்களை வீணாக்காதே.       

ஜெபம்

ஆண்டவரே, செல்வத்தின் பின் செல்லாமல் உம்மை ஆவலுடன் தொடர எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.