காலைத் தியானம் – ஜனவரி 25, 2021

மத் 5: 23 – 24                                     

முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து               

இது நாம் அடிக்கடி தியானித்துள்ள வேதபகுதி. சகோதரர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு வாழாமல் தேவனோடு நெருங்கி வாழமுடியாது என்ற உண்மையை இந்த வசனங்களின் மூலமாக தியானித்திருக்கிறோம். உன் பரிசுத்த வாழ்க்கையையும் நீ கொடுப்பதையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதையும் அதே வசனங்கள் உணர்த்துகின்றன. உன் ஆண்டவருக்கு உன் வாழ்க்கைப் பிரியமானதாக இல்லாவிட்டால் உன் காணிக்கைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவைகளைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளமாட்டார். கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய காணிக்கைகளைக் கொடுக்காமல் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழமுடியாது. உன் காணிக்கை ஒரு சடங்காச்சாரமாகிவிடாதபடி கவனமாயிரு. 

ஜெபம்

ஆண்டவரே, என்னையும் என் காணிக்கைகளையும் உமக்குப் படைக்கிறேன். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.