காலைத் தியானம் – ஜனவரி 28, 2021

2 சாமு 24: 1 – 25                                              

நான் இலவசமாய் வாங்கி . . .  சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தாமல்                       

தாவீது ராஜாவின் இந்த உள்ளம் நமக்கு உண்டா? எனக்கு இலவசமாய் கிடைக்கிறதை எப்படி என் ஆண்டவருக்குக் கொடுக்கமுடியும்?  நீ ஆலயத்தில் செலுத்தும் காணிக்கை எப்படிப்பட்டது? சிலருக்கு மற்றவர்கள் ஒருவரும் வாங்காத ரூபாய் நோட்டுகளைப் போடும் இடம்தான் காணிக்கைப் பை. தங்களுக்கு எந்த விதத்திலும் உபயோகம் இல்லாத சாயம்போன பழைய துணிகளைக் கொடுப்பதுதான் ஏழைகளுக்கு உதவும் விதம். நம் ஆண்டவருக்கு இந்த விதமான காணிக்கைகள் அருவருப்பானவை. ஆதாமின் குமாரராகிய ஆபேல், காயீன் ஆகியோருடைய காணிக்கைகளில் கர்த்தர் ஏன் ஆபேலுடைய காணிக்கையை ஏற்றுக் கொண்டார் என்பதையும், ஏன் காயீனுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். உன் ஆண்டவருக்கு எல்லாவற்றிலும் சிறந்ததை மாத்திரம் கொடு.                 

ஜெபம்

ஆண்டவரே,  ஏழைகளை அற்பமாக எண்ணி எனக்குத் தேவையில்லாதவைகளை அவர்களுக்குக் கொடுத்ததற்காக என்னை மன்னியும். ஆமென்.