காலைத் தியானம் – மார்ச் 14, 2021

பிலி 4: 15 – 23                                                                                                 

சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக                                

காணிக்கை கொடுப்பதைப் பற்றி பலவிதமான பிரசங்கங்கள், வேறுபட்ட கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவற்றை இந்நாட்களில் நாம் அதிகமாய்க் கேட்கிறோம். தசம பாகத்திலிருந்து ஒருவருடைய சபைக்கும் அந்த சபையைச் சார்ந்த ஊழியங்களுக்கும் மாத்திரம்தான் கொடுக்க வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். மற்ற ஊழியங்களுக்குக் கொடுக்கவேண்டுமானால் அது தசம பாகத்திற்கும் மேலானதாக இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய வாதம். இன்னொரு சாரார் தசமபாகத்தை எப்படி வேண்டுமானாலும் பிரித்துக் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார்கள். அதைக் குறித்து நான் விவாதிக்கப் போவதில்லை.   வேதம் வாசித்து, தியானித்து, ஜெபித்து ஆண்டவர் உங்கள் மனதில் ஏவுகிறபடி கொடுங்கள். முடிந்தவரை கணக்குப் பார்க்காமல் உங்கள் சபைக்கும் மற்ற ஊழியங்களுக்கும் தாராளமாய்க் கொடுங்கள். நீங்கள் கொடுப்பது கர்த்தருக்குப் பிரியமான பலியாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.                                                       

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ஊழியங்களையும் ஊழியர்களையுனம் தாங்கும்படி எனக்குப் பணமும் பொருளும் கொடுத்திருப்பதற்காக நன்றி சுவாமி.  ஆமென்.