காலைத் தியானம் – மார்ச் 15, 2021

கொலோ 1: 1 – 8                                                                                           

பரலோகத்தில் . . . . வைத்திருக்கிற நம்பிக்கை                             

கொலோசெ பட்டணத்தில் இருந்த திருச்சபை பவுலால் நிறுவப்படவில்லை. பவுல் அந்தப் பட்டணத்துக்குச் சென்றதும் இல்லை. பவுல் எபேசு பட்டணத்தில் பிரசங்கித்து அங்கு ஒரு சபையை ஏற்படுத்தியிருந்தார். அங்கிருந்த கொலோசெ பட்டணத்தைச் சார்ந்த ஒரு விசுவாசி நற்செய்தியை தன் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றார். நாளடைவில் கொலோசெயில் ஒரு சபை நிறுவப்பட்டு அது அன்பிலும் ஐக்கியத்திலும் சிறந்து விளங்கியது. கொலோசெ கிழக்கு நாடுகளிலிருந்தும் மேற்கு நாடுகளிலிருந்தும் வணிகர்கள் செல்லும் பாதையில் இருந்தது. ஆகையால் காலப் போக்கில், அவர்களுடைய விசுவாசம் இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தாத விசுவாசமாக மாறியது. இதுதான் பவுல் இந்த நிருபத்தை எழுதியதின் பின்னணி. இயேசு கிறிஸ்துவே நம்முடைய விசுவாசத்தின் மையம். அவர் இல்லாவிட்டால் பரலோகத்தைக் குறித்த நிச்சயம் ஒருவருக்கும் இல்லை. நானே வழி என்று கூறியவர் அவர்.  பரலோக வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறாயா? பூலோக வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சிக்காலம்.                                                       

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் பரலோக வாசஸ்தலதிற்காக நன்றி சுவாமி. ஆமென்.