காலைத் தியானம் – ஏப்ரல் 17, 2021

ஆமோஸ் 3: 1 – 6               

உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்         

கர்த்தர் இஸ்ரவேல் மக்களைத் தெரிந்துகொண்டார். அவர்கள் மூலமாக உலகம் அனைத்தும் கர்த்தரை அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவருடைய திட்டம். அது அநேக இஸ்ரவேலர்கள் கர்த்தரை விட்டு விலகிய பின்னரும், இயேசு கிறிஸ்துவின் வருகையின் மூலமாகவும், அவருடைய சீஷர்களின் வாழ்க்கை மூலமாகவும் நிறைவேறியது. இஸ்ரவேலர் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்படுவதற்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ளவில்லை. கர்த்தர் அவர்களைத் தெரிந்துகொண்டார். கர்த்தர் உன்னையும் தெரிந்துகொண்டுள்ளார்.  தெரிந்துகொள்ளப்படவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. உன் செயல் ஒவ்வொன்றுக்கும் பிரதிபலன் உண்டு என்பதை இன்று வாசித்த வேதவசனங்கள் நினைவுபடுத்துகின்றன.

ஜெபம்

ஆண்டவரே, உமது எதிர்பார்ப்புக்குப் பாத்திரனாக நடந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.