காலைத் தியானம் – ஏப்ரல் 19, 2021

ஆமோஸ் 4: 1 – 5               

பாசானின் மாடுகளே         

இஸ்ரவேலின் பணக்கார பெண்கள் கொழுத்த மாடுகள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும்படி, ஏழைகளை ஒடுக்கினார்கள். நாமும் அதைத்தான் செய்கிறோமோ? மேலும் இன்று வாசித்த பகுதியில், பெத்தேலிலும், கில்காலிலும் கர்த்தருக்குத் துரோகம் பண்ணும்படி ஆமோஸ் இஸ்ரவேலரைச் சீண்டுகிறார். பெத்தேல், தேவன் ஆபிரகாமுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை யாக்கோபோடு புதுப்பித்துக் கொண்ட இடம். கில்கால், தேவன் யோசுவாவோடு உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொண்ட இடம். அங்கேதான் இஸ்ரவேலரின் முதல் மன்னனான சவுல் முடிசூட்டப்பட்டான். பெத்தேல், கில்கால் போன்ற இடங்கள்கூட இஸ்ரவேலருக்குக் கர்த்தருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தவில்லை. நீ உன் தேவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையையும் பொருத்தனைகளையும் மறந்துவிடாதே.

ஜெபம்

ஆண்டவரே, ஏழைகளை ஒடுக்காதபடியும் உம்மிடம் நான் கொடுத்துள்ள வாக்குகளைவிட்டு விலகாதபடியும் என்னைக் காத்து வழிநடத்தும். ஆமென்.