காலைத் தியானம் – ஏப்ரல் 20, 2021

ஆமோஸ் 4: 6 – 13               

ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள்         

ஆண்டவர் பலவிதமான நன்மைகளால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நாம் நம்முடைய திறமைகளினால் அவற்றை சம்பாதித்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் பாவ வாழ்க்கைக்கு நேராக திரும்பி விடுகிறோம். பணம் அதிகம் இருக்குமிடத்தில் பாவமும் அதிகரித்துவிடுகிறது. ஆண்டவர் அவரிடத்தில் திரும்ப மாட்டோமோ என்ற ஆதங்கத்தில், பூமி அதிர்ச்சிகளையும், வெள்ளங்களையும், கொள்ளைநோய்களையும், அழிவுகளையும் அனுப்புகிறார். நாமோ, ஆண்டவர் இருந்தால் ஏன் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடக்கின்றன என்று கேட்டுவிட்டு பாவத்தில் தொடருகிறோம். அவர் மழையைத் தடுத்து நிறுத்துகிறார்; பஞ்சத்தை அனுமதிக்கிறார்; வாலிபர்கள் மரணத்தைச் சந்திக்கும் தருணங்களை அனுமதிக்கிறார்.  நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட நோய்களினால் நம்முடன் பேச முயற்சிக்கிறார். இன்று அவருடைய ஆதங்கம் “நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போகிறீர்கள்” என்பதுதான். உன் ஆண்டவருடைய அழைப்பை அசட்டைப் பண்ணாதே.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய சத்தத்தைக் கேட்க்கும்படி எப்பொழுதும் என் இருதயம் உமக்காகத் திறந்திருக்க உதவி செய்யும். ஆமென்.