காலைத் தியானம் – ஜூன் 06, 2021

மீகா 2: 6 – 11    

தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்   

           பாவிகளை அழிப்பது நம்முடைய ஆண்டவருடைய விருப்பமோ அல்லது நோக்கமோ அல்ல. நம்முடைய பாவம் கர்த்தரை வேதனைப்படுத்துகிறது. நம்மை அவரிடமிருந்து பிரிக்கிறது. நாம் உண்மையாக மனந்திரும்பி ஆண்டவரைப் பின்பற்ற வேண்டுமென்பதைத்தான் அவர் விரும்புகிறார். நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் அவரைப் புறக்கணிக்கும் கூட்டமாக இருந்தாலும், அவர் கூட்டிச் சேர்க்கும் மீதியானவர்கள் (அதாவது remnants)  திரளான கூட்டமாயிருப்பார்கள் என்பது தீர்க்கதரிசியின் வார்த்தை. நீயும் அவர் கூட்டிச் சேர்க்கும் அந்தக் கூட்டத்தில் இருக்கிறாயா? மனிதனின் இருதயத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அவனுடைய இரட்சிப்புக்குத் தடை வேறொன்றும் இருக்கமுடியாது. அரசாங்க சட்டமோ அல்லது சாத்தானின் சூழ்ச்சியோ குறுக்கே வந்தால், தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவைகளை உடைத்தெறிய வல்லவராயிருக்கிறார். நீ அதற்காக ஜெபிக்கிறாயா?                                                                            

ஜெபம்:

ஆண்டவரே, என் தேசத்திலுள்ள என் சகோதரர்களும் சகோதரிகளும் உம்மிடம் வருவதற்கு இடையூறாக இருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கியருளும். ஆமென்.