மீகா 5:7 – 15
செவிகொடாத புறஜாதிகளிடத்திலே . . . நீதியைச் சரிகட்டுவேன்.
கர்த்தர் தங்களுக்கு மாத்திரமே சொந்தம் என்று இஸ்ரவேலர்கள் நினைத்த அந்த நாட்களிலேயே மீகா தீர்க்கதரிசி, புறஜாதிகளும் கர்த்தருக்குச் செவிகொடுக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். உலகனைத்தையும் படைத்த கர்த்தரை ஒரு ஜாதியினருக்கோ அல்லது ஒரு சில நாட்டினருக்கோ மாத்திரம் ஆண்டவர் என்று நினைக்கும் மனநிலை இன்றும் இருக்கிறது. இந்தியாவில் பலரும் இயேசுவை மேற்கு நாடுகளின் கடவுள் என்றே நினைக்கிறார்கள். இது தவறு. கர்த்தராகிய இயேசுவுக்கு எல்லா மனிதரும் செவிகொடுக்கவேண்டும். ஆகையால் அவரை எல்லாருக்கும் தெரியப்படுத்தவேண்டிய உன் வேலையை நீ செய்.
ஜெபம்:
ஆண்டவரே, உம்மையும் பரலோகத்தையும் குறித்த நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கும் பணியில் என்னையும் உபயோகியும். ஆமென்.