காலைத் தியானம் – ஜூன் 30, 2021

ஆபகூக் 3: 1 – 10        

கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்                  

முதல் இரண்டு அதிகாரங்களில் ஆபகூக்கின் கேள்விகளையும் கர்த்தர் கொடுத்த பதிலையும் பார்த்தோம். மூன்றாம் அதிகாரம் முழுவதும் ஆபகூக் தீர்க்கதரிசியின் விண்ணப்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கின்றது.  18 வசனங்களில் அடங்கியுள்ள இந்த ஜெபத்தில் ஆபகூக் கேட்பதெல்லாம் இரண்டே காரியங்கள்தான். 1) கர்த்தாவே உமது கிரியையை எங்கள் நாட்களிலே உயிர்ப்பியும் (வருஷத்தின் நடுவிலே . . . புதுப்பியும்). 2) நீர் கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். இந்த இரண்டு விண்ணப்பக் குறிப்புகளும் இரண்டாவது வசனத்தில் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  மீதி வசனங்களிலெல்லாம் கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதும், அவர் என்ன செய்தார் என்பதும், ஆபகூக் என்ன செய்வார் என்பதும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜெபம் எப்படியிருக்கிறது? நாம் ஒரு வசனத்தில் ஆண்டவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிட்டு, 17 வசனங்களில் நமக்கு என்ன வேண்டும் என்பதைப் பட்டியல் போட்டு கொடுக்கிறோம் அல்லவா? ஆண்டவரோடு நம்க்குள்ள உறவு வளர வளர, நம்முடைய ஜெபமும் மாறவேண்டும்.                                                                                                                                      

ஜெபம்:

ஆண்டவரே, நீர் உமது சீஷர்களுக்குக் கற்றுத்தந்ததைப் போல எனக்கும் ஜெபிக்கக் கற்றுத்தாரும். ஆமென்.