செப் 3: 1- 8
சத்தத்துக்குச் செவி கொடுக்கவில்லை
சில சமாயங்களில், இரண்டு பேருக்கிடையே கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் வந்துவிட்டால், இரண்டுபேரும் பேசிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்பதில்லை. அதற்கு முக்கிய காரணம், எனக்கு எல்லாம் தெரியும் என்ற பெருமை! நான் சொல்வதுதான் சரி என்ற அகங்காரம்! இதைவிட மோசமான காது கேட்காத நிலை ஒன்று உண்டு. அதுதான் ஆண்டவருடைய சத்தத்திற்கு நாம் செவி கொடுக்காமல் இருக்கும் நிலை. எருசலேம் பட்டணம், ஆலயத்தை மையமாகக் கொண்ட கர்த்தருடைய இடம். அதிலிருந்த மக்களுக்கோ கர்த்தருடைய சத்தம் கேட்கவில்லை. இது மிகவும் ஆபத்தான நிலை. உன் வாழ்க்கையின் சூழ்நிலை எப்படியிருந்தாலும், கர்த்தருடைய சத்தம் கேட்காத நிலைக்குப் போய்விடாதே.
ஜெபம்:
ஆண்டவரே, அனுதினமும் உம்முடைய வார்த்தை எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. ஒருபோதும் உம்முடைய சத்தத்திற்கு என் காதுகளையும் மனதையும் மூடிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.