காலைத் தியானம் – ஜூலை 21, 2021

சகரியா 4: 11 – 14       

குத்துவிளக்கு, இரண்டு ஒலிவ மரங்கள், இரண்டு கிளைகள்                       

                             பொதுவாகவே, தீர்க்கதரிசனங்களில் கொடுக்கப்படும் அடையளங்களின் அர்த்தம் நமக்கு எளிதில் புரிவதில்லை. வேத ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் விளக்கங்களைக் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். அப்படிப் புரிந்துகொண்டவைகள் நம் வாழ்க்கைக்கு எப்படி உபயோகப் படுகின்றன என்பதையும் தியானிப்போம். குத்துவிளக்கு எருசலேமின் ஆலயத்தையும், கர்த்தருடைய திருச்சபையையும் குறிக்கின்றது. கர்த்தருடைய வெளிச்சத்தை உலகிற்குக் காட்டுவதே நானும் நீயும் அடங்கிய திருச்சபையின் வேலை. அந்த குத்து விளக்காகிய திருச்சபை தொடர்ந்து ஒளிவீச தேவையான எண்ணெய் தான் கர்த்தருடைய அளவில்லாத கிருபை. அந்த எண்ணெயைக் கொடுக்கும் இரண்டு ஒலிவ மரங்களும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும், தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியையும் குறிக்கின்றன. இரண்டு கிளைகளும், எருசலேம் ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் அபிஷேகம்பண்ணின ஊழியர்களாகிய யோசுவாவையும் செருபாபேலையும் குறிக்கின்றன.  கர்த்தருடைய திருச்சபையைக் கட்ட இன்றும் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் தேவை.                                  

ஜெபம்:

ஆண்டவரே, என்னுடைய அற்பமான ஆரம்பஆண்டவரே, உம்முடைய திருச்சபையைக் கட்டியெழுப்ப என்னையும் ஒலிவ மரக் கிளையாக உபயோகியும். ஆமென்.