காலைத் தியானம் – ஜூலை 23, 2021

சகரியா 5: 5 – 11       

பறக்கிமரக்காலுக்குள்ளே தள்ளி                        

                             மரக்கால் என்பது அந்த காலத்தில் தானியங்களை அளக்க உபயோகித்த அளக்கும் கூடையைக் குறிக்கும். சகரியா தீர்க்கதரிசியின் இந்த தரிசனம், கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடையே இருந்த சகலவித அக்கிரமங்களையும் எடுத்துப்போடுவதைக் குறித்த சாட்சி. இது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது சகல பாவங்களும் அக்கிரமங்களும் பூமியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படப்போவதைப் பிரதிபலிக்கின்றது. அப்போது பூமியெங்கும் அமைதியும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிலவும்.                                  

ஜெபம்:

ஆண்டவரே, உமது இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறோம். சீக்கிரம் வாரும். ஆமென்.