காலைத் தியானம் – ஜூலை 24, 2021

சகரியா 6: 1 – 8       

நாலு இரதங்களைக் கண்டேன்                                

                             வெவ்வேறு நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட அந்த இரதங்கள், பூமியின் பல்வேறு திசைகளுக்குச் செல்லுகின்றன. அந்த குதிரைகளும் இரதங்களும் ஆண்டவருடைய சமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றன என்பது, பரலோகத்தில் இருக்கும் ஆண்டவருக்கு பூமியில் நடக்கும் காரியங்களிலுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. வடக்கே சென்ற கறுப்பு நிறக் குதிரைகள் கர்த்தருடைய நியாயத்தீர்ப்பை நிலைநாட்டின. நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தருடைய இரக்கமும் அன்பும் நம்முடய கண்களுக்குத் தெரியாது. அவருடைய கோபமும் நீதியுமே அந்நாளில் வெளிப்படும். கர்த்தருடைய கோபத்துக்கு ஆளாகாமல் உன்னைக் காத்துக் கொள்.                                

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் என்னைக் கழுவி, நான் வழி தவறிப் போய்விடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.