சகரியா 7: 1 – 7
நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம் பண்ணினீர்கள்?
எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து எழுபது ஆண்டுகள் இஸ்ரவேல் மக்கள் ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம் பண்ணினார்கள். இப்போது எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டும் பணி ஆரம்பமாகிவிட்டது. இந்நிலையிலும் அவர்கள் தொடர்ந்து உபவாசிக்கவேண்டுமா என்பதுதான் மக்களின் கேள்வி. அதற்கு ஆண்டவர், நீங்கள் எதற்காக உபவாசம்பண்ணினீர்கள் என்று கேட்கிறார். பாவத்தைவிட்டு விலகி ஆண்டவரைத் தொழுது கொள்ளாமல், உபவாசம் மட்டும் பண்ணினால் அந்த உபவாசத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. நீ உபவாசம்பண்ணுவதும் ஒரு சடங்காச்சாரம் தானோ? நீ ஆலயத்துக்குச் செல்வது பரிசுத்தத்தோடே உன் ஆண்டவரைத் தொழுதுகொள்வதற்காகவா அல்லது அதுவும் ஒரு சடங்காச்சாரம்தானா?
ஜெபம்:
ஆண்டவரே, உம்முடைய இரண்டாம் வருகைக்காக நான் எப்போதும் தயாராக இருக்க உதவி ஆண்டவரே, அர்த்தமில்லாத சடங்காச்சாரங்களில் ஈடுபடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.