காலைத் தியானம் – ஆகஸ்ட் 10, 2021

சகரியா 11: 14 – 17      

மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ!

                            நான் சொல்லுகிறதை விரும்பாதவர்களைக் குறித்து எனக்குக் கவலையில்லை என்று ஒரு சபையின் போதகர் பிரசங்கத்தில் அடிக்கடி சொல்லுவதைக் கேட்டிருக்கிறேன். சபை மக்களின் மேய்ப்பர் தான் போதகர். அவர் தமது சபை மக்களில் ஒரு பகுதியினரைக் குறித்துக் கவலையில்லை என்று சொன்னால் அவர் தன் மந்தையின் ஒரு பகுதியைக் கைவிடுகிறார் என்று அர்த்தம். நான் வேதாகமத்தின் அடிப்படையில் சொல்வதை விரும்பாதவர்களின் கருத்தைக் குறித்து எனக்குக் கவலையில்லை என்பதைத்தான் அவர் அப்படி தவறாகச் சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்.  பிரதம மந்திரியும் நாட்டை ஆளுகிறவர்களும் குடிமக்களின் மேய்ப்பர்கள். நீ வேலை செய்யுமிடத்தில் உன் பொறுப்பிலிருப்பவர்களுக்கு நீ மேய்ப்பன். உன் குடும்பத்தில் உன் பிள்ளைகளுக்கு நீ மேய்ப்பன். நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கும் மந்தையின் நல்வாழ்வுக்கு நாமே பொறுப்பு. உன் பொறுப்பைப் புறக்கணித்தால், உன் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.                       

ஜெபம்:

ஆண்டவரே, எனக்குக் கொடுத்திருக்கும் மந்தையைச் சரியாக வழிநடத்த வேண்டிய நல்மனதையும் ஞானத்தையும் எனக்குத் தாரும். ஆமென்.