காலைத் தியானம் – ஆகஸ்ட் 17, 2021

மல்கியா 1: 1 – 9      

நான் பிதாவானால் என் கனம் எங்கே?                    

                            மல்கியா தீர்க்கதரிசியின் புத்தகம் கி.மு. 433க்கும் 430க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. இது பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையே ஒரு பாலமாக அமையும் புத்தகம். மல்கியா தீர்க்கதரிசி மக்களின் பாவங்களையும் ஆசாரியர்களின் பாவங்களையும் சுட்டிக் காட்டி, கர்த்தருடைய இரக்கத்துக்காகவும் மன்னிப்புக்காகவும் அவரிடம் கெஞ்சும்படி ஆலோசனை கூறுகிறார். இன்று கர்த்தருடைய ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் ஆசாரியர்கள் போன்றவர்கள். ஊழியங்களில் மெத்தனம் வந்து விட்டதோ? கர்த்தரைச் சேவிக்கிறோமா? அல்லது மனிதனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்கூட கர்த்தருக்குக் கொடுப்பதில்லையோ? ஒருவேளை நம்மிடம் இந்த குற்றம் காணப்படுமானால், தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள் என்பது மல்கியாவின் ஆலோசனை.               

ஜெபம்:

ஆண்டவரே, உம்மைச் சேவிப்பதில் மெத்தனம் வந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.