காலைத் தியானம் – ஆகஸ்ட் 24, 2021

மல்கியா 4: 1 – 6     

நான் உன்னிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்

                           இங்கு எலியா தீர்க்கதரிசி என்று சொல்லப்பட்டிருப்பது யோவான் ஸ்நானனைக் குறிக்கும். லூக்கா 1: 13-17 வசனங்களில், தேவதூதன் யோவானின் தகப்பனாகிய சகரியாவிடம் , உனக்குப் பிறக்கப் போகும் குமாரனுக்கு யோவான் என்று பெயரிடு; அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாயிருப்பான் என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். மத்தேயு 17: 10-13 வசனங்களைப் பார்க்கும்போது அங்கே இயேசுவின் சீஷர்கள், மல்கியாவில் சொல்லப்பட்டுள்ள இந்த தீர்க்கதரிசனத்தைக் குறித்து இயேசுவிடம் விளக்கம் கேட்கிறார்கள். இயேசு யோவான் ஸ்நானனைக் குறித்துச் சொல்லி, “எலியா வந்தாயிற்று” என்று சொல்லுவதைக் கவனியுங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக் கொண்டும் அவருடைய ஊழியர்களைக் கொண்டும் மக்களுடைய தவறுகளை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்.  கர்த்தருக்கு இன்றும் எலியாக்கள் தேவை. நீ ஏன் இன்றைய எலியாவாக இருக்கக் கூடாது?

ஜெபம்:

ஆண்டவரே, நீர் விரும்பும்படி என்னை உபயோகியும். எவ்வித துன்பங்கள் வந்தாலும், நான் உமக்கு முற்றிலும் கீழ்ப்படியும் ஊழியனாக இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.