காலைத் தியானம் – ஆகஸ்ட் 26, 2021

சங் 2: 1 – 12            

பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்                                  

                            ஆண்டவருடைய இரண்டு விதமான உணர்வுகளை இந்த சங்கீதத்தில் பார்க்கிறோம். நம்முடைய மதியீனத்தைப் பார்த்து அவர் சிரிக்கிறார். எவ்வளவு மேன்மையான காரியங்களுக்காக உன்னைப் படைத்தேன்! நீயோ பணம், வீடு, கார், நிலம் என்று தற்காலிகப்பொருட்களின் மேல் உன் வாஞ்சையை வைத்து வீணான காரியங்களையே சிந்தித்துக்கொண்டிருக்கிறாயே என்று சொல்லி சிரிக்கிறார். இப்படி அறியாத சிறுபிள்ளையாக இருக்கிறானே என்று சொல்லி சிரிக்கிறார். ஆனால் அவர் இப்படி சிரிக்கும் காலம் கொஞ்சம் தான். அவர் சிரிக்கும் காலம் கிருபையின் காலம். நாம் எப்படியாவது மேலானவைகளை நோக்கித் திரும்பிவிட வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் காலம். அவருடைய சிரிப்பு கோபமாக மாறுவதற்கு முன் உன் வழிகளை நீ சரி செய்துகொள். கிருபையின் காலத்தை அசட்டை செய்யவேண்டாம்.

ஜெபம்:

ஆண்டவரே, அனுதினமும் வீணான சிந்தனைகளும் இவ்வுலகச் சிற்றின்பங்களும் என்னை இழுக்கின்றன.  அவைகளை உதறித் தள்ளும் மன உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.