காலைத் தியானம் – ஆகஸ்ட் 28, 2021

சங் 4: 1 – 8               

நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்                 

                            பூமி அதிர்ச்சியின் போது இடிந்து விழுந்த கட்டிடச் சுவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்று யோசித்ததுண்டா? அதேபோல எல்லா பக்கங்களிலிருந்தும் துன்பங்கள் நெருக்கும் அனுபவம் உனக்கு உண்டா? நான் என்ன செய்வேன்? இந்த நெருக்கத்திலிருந்து எப்படி தப்பி வெளியே வருவேன் என்று திகைத்து கலங்கும் நேரத்தில் ஆண்டவரை நோக்கிப் பார். அவர் நெருக்கத்தை விசாலமாக்கிவிடுவார். இது நமக்குத் தெரிந்ததுதானே என்று நினைக்கலாம். இருந்தாலும் துன்பங்கள் வந்து நம்மை நெருக்கும்போது துன்பத்தைப் பார்த்து திகைத்துவிடுகிறோம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் Don Moen என்னும் பாடகர் God will make a way, where there seems to be no way என்னும் பாடலை எழுதினார். இக்கட்டான சூழ்நிலைகளில் உன்னுடைய சொந்த பலத்தையும் அறிவையும் மற்ற மனிதரையும் நம்பாமல் ஆண்டவரையே நோக்கிப் பார். அவர் உன்னுடைய நெருக்கத்திலும் விசாலமுண்டாக்குவார்.

ஜெபம்:

ஆண்டவரே, என் துன்பங்களை உம்முன் வைக்கிறேன். நீரே என் சூழ்நிலையை மாற்றும். எனக்கு சமாதனத்தையும் மகிழ்ச்சியையும் தாரும். ஆமென்.