காலைத் தியானம் – அக்டோபர் 15, 2021

சங் 35: 11 – 18      

ஆண்டவரே, எது வரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்   

                           அநியாயமாய் பணம் சம்பாதிக்கிறவன் செழிப்புடன் வாழ்வது; மற்றவர்களுக்குத் தீமை செய்கிறவன் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாய் சுற்றித் திரிவது; ஒரு குற்றமும் அறியாத குழந்தைகளும் பொது மக்களும் கொல்லப்படுவது; அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவன் பதவி உயர்வு பெறுவது; ஒரு சில முதலாளிகளின் நலனுக்காகப் பல தொழிலாளிகள் வேலை இழப்பது – இப்படி நாம் அனுதினமும் எதிர்கொள்ளும் அநியாயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நம் மனதில் அடிக்கடி தோன்றும் கேள்விகள், ஆண்டவர் ஏன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? ஏன் அவர் எதுவும் செய்கிறதில்லை? – போன்றவைதான். இந்த கேள்விகளுக்குச் சரியான பதில் என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ஆண்டவருக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கிறதில்லை என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும். அவரே சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் என்பதும் தெரியும். Our God is still in control.    

ஜெபம்:

ஆண்டவரே, என்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைப் பார்க்கும்போதும் நீரே நியாதிபதி என்பதை விசுவாசிக்கிறேன். உம்முடைய பிள்ளைகளைக் காத்துக்கொள்ளும். ஆமென்.