காலைத் தியானம் – நவம்பர் 17, 2021

சங் 56: 1 – 13

மனுஷன் எனக்கு என்ன செய்வான்?                     

                           மனிதன் உனக்கு எதிராக எழும்பும்போது நீ கலங்குகிறாயா? நீயும் உன் ஆண்டவரும் ஒரு பக்கத்திலும், தேவனுடைய ஆசீர்வாதம் பெற்றிராத உன்னுடைய எதிரி மற்றொரு பக்கத்திலும் நிற்பதை உன் மனக்கண் முன் கொண்டுவா. நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்வாய். தேவனை அறியாத மனிதன் வெறும் மாம்சமானவன். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய தேவனுடைய பிள்ளைகளோடு உலாவிய கர்த்தர் உன்னோடும் இருக்கிறார். அவருடைய கையைப் பிடித்துக்கொள்.                                                                     

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கிறேன். மனிதனால் வரும் துன்பங்களைப் பார்த்து கலங்காதபடி என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.