காலைத் தியானம் – டிசம்பர் 31, 2021

சங் 65: 1 – 13   

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்   

                                    வருடத்தின் கடைசி நாளான இன்று கணக்கெடுக்கும் நாள். ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளையும் நினைவுகூரும் நாள். அவற்றை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து தேவனுக்கு நன்றி சொல்லும் நாள். இந்த 2021ம் வருடத்தில் கோவிட்-19 மூலமாகவும், மற்ற வியாதிகள் மூலமாகவும் பலர் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிட்டார்கள். விவரிக்கமுடியாத துன்பங்களை நம்மில் சிலர் கடந்து வந்திருந்த போதிலும், ஆண்டவர் செய்துள்ள நன்மைகள் அநேகம் உண்டு. ஒருவேளை நீ உன் ஆண்டவருக்காகவும் பிறருக்காகவும் செய்யவேண்டியவைகளில் எதையாவது செய்யாமல் வைத்திருந்தால் இன்று அதை செய்துமுடிக்கவேண்டிய நாள். நாளைக்கென்று எதையும் தள்ளிப்போட வேண்டாம். இன்று முழுவதும் ஆண்டவரைத் துதித்துக் கொண்டேயிரு.             

ஜெபம்:

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் செய்த சகல நன்மைகளையும் மறவாதே. ஆமென்.