காலைத் தியானம் – டிசம்பர் 03, 2021

மத் 1: 12 – 17

அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்          

                           இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனிதனுடைய கற்பனையில் தோன்றிய கதை அல்ல. அது சரித்திரத்தில் நடந்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தைத் தவிர பல வரலாற்றுப் புத்தகங்களில் கூட இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் பூலோக வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கின்றன. வரலாறே கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்று பிரிக்கப்பட்டு அவர் பூமியில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்த காலகட்டத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும் மத்தேயு கொடுத்துள்ள வம்ச வரலாறு இயேசு தாவீதின் வம்சத்தில் தோன்றுவார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தது நிறைவேறியதைக் காட்டுகின்றது. அவர் சாதாரண மனிதன் அல்ல என்பதையும் 16ம் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதில் யோசேப்பு இயேசுவைப் பெற்றான் என்று சொல்லப்படவில்லை. மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை வெறும் சரித்திர கதாநாயகனாகத்தான் உனக்குத் தெரியுமா அல்லது அவர் நீ பேசி, உறவாடி, வணங்கும் உன் ஆண்டவரா?                                                                                                                         

ஜெபம்:

ஆண்டவரே, நான் அனுதினமும் பேசி, உறவாடி, தொழுதுகொள்ளும் இரட்சகராக நீர் இருப்பதால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.