காலைத் தியானம் – டிசம்பர் 12, 2021

மத் 4: 5 – 7

நீர் தேவனுடைய குமாரனேயானால்       

                                     இயேசு தேவனுடைய குமாரன் என்பது சாத்தானுக்கு நன்றாகவே தெரியும். இன்று இயேசுவை ஒரு நல்ல போதகர், நல்ல மனிதர், ஒரு தீர்க்கதரிசி என்று நினைக்கிறவர்கள் (குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள்) அநேகர் உண்டு.  அவரை உலகிலுள்ள கோடிக்கணக்கான தெய்வங்களுள் ஒருவர் என்று நினைக்கிறவர்களும் (குறிப்பாக இந்து மதத்தைப் பின்பற்றும் சகோதரர்கள்) உண்டு. சாத்தானுக்கு அப்படிப்பட்ட குழப்பமேயில்லை. இயேசு உலக மக்களைப் பாவத்திலிருந்து இரட்சித்து மீட்டு எடுக்க பூமிக்கு வந்துவிட்டார் என்பதை உணர்ந்த அவன், பரலோகப் பிதாவின் திட்டத்தைக் கெடுக்க வழி தேடுகிறான். இயேசு, தான் யார் என்பதைத் தன்னுடைய வழியில் நிரூபிப்பதின்மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார் என்று கணக்குப் போடுகிறான். சாத்தான் காட்டும் இலக்கு நம்முடைய பார்வைக்கு நல்லதாகத் தோன்றலாம். ஆனால் சாத்தானுடைய வழியில் போய்விடாதே. நல்லதாகத் தோன்றும் ஒரு காரியத்தை செய்யும் முன்னும், ஆண்டவரே நான் இதை, இந்த விதமாய்ச் செய்வதை நீர் விரும்புகிறீரா என்று கேள்.                          

ஜெபம்:

ஆண்டவரே, சாத்தானுடைய சூழ்ச்சிக்கு நான் விழுந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.