காலைத் தியானம் – ஜனவரி 31, 2022

மத் 13: 44 – 58

இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது

                                 இயேசுவின் சொந்த ஊரிலுள்ள மக்கள் அவரை ஒரு தச்சனுடைய மகனாகத்தான் பார்த்தார்கள். They had a pre-conceived and pre-fixed opinion about Jesus. அந்த எண்ணம் அவர்களுடைய மனந்திரும்புதலுக்குத் தடையாக இருந்தது. நாமும் பொதுவான பல அபிப்பிராயங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் குணம் அதுதான்! இந்த மொழி பேசும் மக்களை நம்பமுடியாது. எத்தனை அபிப்பிராயங்கள்! இவைகள் அனைத்தும் நீயே அணிந்துகொண்ட மனத்திரைகள். ஆண்டவர் உன்னை உபயோகப் படுத்துவதற்கு உன் மனத்திரைகள் தடையாக இருக்கலாம். மனத் திரைகளை உடைத்து எறி.  திறந்த மனதோடு உன் ஆண்டவரை நோக்கிப் பார். வல்லமையான காரியங்களை அவர் செய்வார்.

ஜெபம்:

ஆண்டவரே, என் மனத் திரைகளை உடைத்துப் போட்டு அதிசயமான காரியங்களை என் வாழ்க்கையிலும் செய்யும். ஆமென்.