காலைத் தியானம் – ஜனவரி 03, 2022

மத் 6: 19 – 21   

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டாம்   

                                    பூமியைச் சுதந்தரித்துக் கொள்வீர்கள் என்று சொன்ன இயேசு, பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைகாதீர்கள் என்று சொல்லுகிறார். பூமியையும் அதின் நிறைவையும் மனிதனுக்காகக்  கொடுத்த கர்த்தர், மனிதன் பொக்கிஷங்களின் அடிமையாகிவிடக் கூடாது என்று விரும்புகிறார். குறிப்பாக மனிதன் உருவாக்கியுள்ள பணம் உனக்குக் கொடுக்கப்படும்போது அதில் எவ்வளவு உனக்காக உபயோகிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாயிருக்க வேண்டும். ஏழைகளுக்கும் கஷ்டத்தில் வாழ்கிறவர்களுக்கும், ஆலயத்துக்கும், ஊழியங்களுக்கும் உன் பணத்தைக் கொடுப்பதின் மூலம் நீ பரலோகத்தில் பொக்கிஷம் சேர்த்துவைக்கிறாய். மேலும் வேதாகமம் சொல்லும் ஒரு முக்கியமான கொள்கையை மறந்துவிடக் கூடாது. உன் பணம் எங்கே இருக்கிறதோ, அங்கேயே உன் மனம் இருக்கும். பணம் வங்கியில் பெருகிக்கொண்டே போனால், உன் மனம் வங்கியையே நினைத்துக் கொண்டிருக்கும்.  அது பரலோகத்தில் இருந்தால், உன் மனம் பரலோகத்தையே நினைத்துக் கொண்டிருக்கும். உன் மனம் எங்கே இருக்கவேண்டும் என்பதை நீ தான் தீர்மானம் பண்ணவேண்டும்.               

ஜெபம்:

ஆண்டவரே, என் உபவாசம் உமக்குப் பிரியஆண்டவரே,  பரலோகத்தில் பொக்கிஷம் சேர்த்துவைக்க எனக்குத் தெளிவான மனதைத் தாரும். ஆமென்.