மத் 7: 21 – 29
பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
நாம் நம்முடைய சித்தத்தின்படி செயல்பட்டுவிட்டு அதை ஆண்டவருக்குத் தெரியப்படுத்திவிட்டால், அது பிதாவின் சித்தமாகிவிடாது. கர்த்தருடைய பெயரைச் சொல்லி தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களும் பிசாசுகளைத் துரத்துகிறவர்களும் கூட பிதாவின் சித்தத்தின்படி செயல்படாதவர்களாக இருக்க முடியும் என்பதை 22ஆம், 23ஆம் வசனங்களில் பார்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கம் முழுவதையும் எத்தனையோ முறை வாசித்த பின்னும், நான் என் விருப்பப்படிதான் வாழ்வேன் என்று நீ நினைத்தால், உன் வாழ்க்கையும் மணலின் மீது கட்டப்பட்ட அஸ்திபாரம் இல்லாத வீட்டுக்குச் சமம். பெரிய காரியமாக இருந்தாலும் சிறிய காரியமாக இருந்தாலும் உன் ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்பதை ஒவ்வொரு நிமிடமும் கேட்டு அதன்படி செயல்பட பழகிக்கொள்.
ஜெபம்:
ஆண்டவரே, உம் வார்த்தைக்காகவும் உமது போதனைகளுக்காகவும் நன்றி சுவாமி. நான் தியானிக்கும் வசனங்கள், மென்மேலும் ஆவியில் வளர எனக்கு உதவுவதாக. ஆமென்.