காலைத் தியானம் – ஜனவரி 11, 2022

மத் 8: 1 – 4

பிதாவின் சித்தத்தின்பஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு    

                                    கர்த்தர் என்னை நிச்சயமாக சுகப்படுத்திவிடுவார் என்று நம்புவதுதான் விசுவாசம் என்று நாம் நினைக்கிறோம். அது சரியல்ல. கர்த்தர் என்னை சுகப்படுத்த வல்லவராயிருக்கிறார் என்று நம்புவதுதான் விசுவாசம். இயேசு குஷ்டரோகத்திலிருந்து சுகம்பெற்ற மனிதனைப் பார்த்து இதை ஒருவரிடமும் சொல்லாதே என்று ஏன் சொல்லவேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில காரணங்களை யூகிக்க முடிகிறது. ஒருவேளை இயேசுவை அற்புதங்களை நடத்தும் வெறும் “அற்புதக்காரர்” என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதால் அப்படி சொல்லியிருக்கலாம். (இன்று நம்மில் அநேகர் இயேசுவை அப்படித்தானே பார்க்கிறோம்!) அல்லது அவர் செய்த அற்புதங்கள் அவருடைய போதனைகளை மக்கள் கேட்பதற்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்லியிருக்கலாம். ஆண்டவருடைய வழிகள் நம் புத்திக்கு எட்டாதவைகள்.       

ஜெபம்:

ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். எனக்குப் புரியாத பாதையாக இருந்தாலும் உம்முடைய சித்தத்தின்படி என்னை வழிநடத்தும். ஆமென்.