காலைத் தியானம் – ஜனவரி 15, 2022

மத் 9: 1 – 8

இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து    

                                    இயேசுவுக்கு உன்னுடைய நினைவுகளும் தெரியும். உன் மனதில் ஒருவனுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால், அந்த எண்ணம் உன் ஆண்டவருக்குத் தெரியும். அதை அறிந்து அவர் வருத்தப்படுவார். நீ உன் வார்த்தையாலோ அல்லது செயலாலோ உன் சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதே போல உன்னுடைய நல்லெண்ணங்களும் அவருக்குத் தெரியும். ஆகையால் தான் 1 சாமுவேல் 16:7ல் கர்த்தர் சாமுவேலைப் பார்த்து, மனிதன் முகத்தைப் பார்க்கிறான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று சொன்னார். உன் நினைவுகளை அறிந்திருக்கிற உன் ஆண்டவரிடம் ஜெபிக்கும் போது அடுக்குமொழியில் பேச வேண்டியதில்லை. என்னால் மற்றவர்களைப் போல ‘சிறப்பாக’ ஜெபிக்க முடியவில்லையே என்று வருத்தப்படவேண்டிய அவசியமும் இல்லை.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் வார்த்தைகளைக் கடந்து என் நினைவுகளைக் கவனிப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.