மத் 9: 27 – 38
அறுப்புக்கு எஜமான்
பிதாவாகிய தேவனே அறுப்புக்கு எஜமான். அறுப்புக்குத் தயாராக அநேக ஆத்துமாக்கள் இருந்தாலும் அறுப்புக்கு ஊழியக்காரர்களைத் தெரிந்துகொள்வது பிதாவாகிய தேவன் தான். அவரால் தெரிந்துகொள்ளப்படாமல் நானும் ஊழியத்துக்கு வருகிறேன் என்று சொல்லித் தாமாக வருகிறவர்கள் உண்டு. அப்படி வருகிறவர்களின் முயற்சியால் ஆண்டவருக்கு ஒரு பயனும் இருக்கமுடியாது. ஆகையால் அழைப்பு இல்லாமல் ஊழியத்துக்குச் செல்ல வேண்டாம். அதே சமயம் அழைக்கப்பட்டால் தாமதிக்கவும் வேண்டாம். எஜமானுடைய உத்தரவு இல்லாமல் அறுவடை நடக்காது. ஆகையால் ஊழியத்தின் கனிகளைக் குறித்து நீ கவலைப் படாதே. உன்னுடைய பரம தகப்பன் அவைகளைப் பார்த்துக்கொள்ளுவார்.
ஜெபம்:
ஆண்டவரே, அறுப்புக்கு ஆயத்தமாக அநேக ஆத்துமாக்கள் இருப்பதைப் பார்க்கிறோம். நீரே அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும். ஆமென்.