காலைத் தியானம் – ஜனவரி 21, 2022

மத் 10: 32 – 42

சமாதானத்தையல்ல . . . பிரிவினையுண்டாக்க வந்தேன்

                                  சமாதானப்பிரபு என்று அழைக்கப்படுகிற இயேசுவால் எப்படி பிரிவினை உண்டாக்கமுடியும்? அவர் மனந்திரும்பி தன்னைப் பின்பற்றும் மனிதருக்கும் பிதாவாகிய தேவனுக்கும் சமாதானம் உண்டாக்கதான் பூமிக்கு வந்தார். மனிதருக்குள்ளும் சமாதானம் இருக்கவேண்டும் என்பதுதான் அவருடைய சித்தம். ஆனால் நன்மைக்கும் தீமைக்கும் சமாதானம் இருக்கமுடியாது. There is no compromise. வெளிச்சத்துக்கும் இருளுக்குமிடையே ஒரு நடுவழிப்பாதை கிடையாது. கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கும் சாத்தானின் பிள்ளைகளுக்கும் நடுவே ஒரு பாலம் கிடையாது. இதுதான் இயேசு குறிப்பிடும் பிரிவினை. ஒரு குடும்பத்திலேயே ஒருவர் ஒரு பக்கத்திலேயும் இன்னொருவர் அடுத்த பக்கத்திலேயும் இருக்கக் கூடும். அதுதான் 35ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள பிரிவினை.

ஜெபம்:

ஆண்டவரே, என் குடும்பத்தினர், நண்பர்கள் யாரும் பிரிந்துவிடாமல் உம்முடைய பக்கத்திலேயே இருக்கக் கிருபை தாரும். ஆமென்.