காலைத் தியானம் – ஜனவரி 22, 2022

மத் 11: 1 – 19

வருகிறவர் நீர் தானா?

                                  யோவான் ஸ்நானனுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது என்று தெரியவில்லை. இயேசு யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வந்த போது, நான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று சொன்ன யோவானுக்கு இப்போது சந்தேகம் வந்துவிட்டது. இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் ‘இவர் என்னுடைய நேசக்குமாரன்’ என்று வானத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டிருந்தும் யோவானுக்கு சந்தேகம் வந்துவிட்டது. தான் சிறையிலிருந்ததால், தன்னுடைய சீஷர்களை நேராக இயேசுவிடமே அனுப்பிவிட்டான். உனக்கும் ஒருவேளை இரட்சிப்பைக் குறித்தோ, பாவமன்னிப்பைக் குறித்தோ, ஆண்டவர் உன்னுடைய வாழ்க்கையில் செய்துள்ள கிரியைகளைக் குறித்தோ சந்தேகம் வந்துவிட்டால், உன் ஆண்டவரைவிட்டு விலகி ஓடிவிடாதே. இயேசு கிறிஸ்துவிடம் நேராகப் போ. அவர் உன்னுடன் பேசுவார்.

ஜெபம்:

ஆண்டவரே, சந்தேகம் வரும் நேரங்களில் என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். ஆமென்.